இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்தை 2வது முறையாக ஜப்தி செய்த அதிகாரிகள்

By Velmurugan sFirst Published Mar 28, 2023, 4:48 PM IST
Highlights

கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பி.ஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தினம் விற்பனை; பக்தர்களுக்கு விபூதி அடித்த போலி சாமியார்

அதே சமயம் சதீஷின் குடும்பத்தினர் கோவை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2019ம் ஆண்டு சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.12 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துக்கான உரிய இழப்பீட்டு தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் வழங்க கோரி மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

புதுவையில் சிறுமி கற்பழித்து கொலை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 16 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இந்நிலையில்,  அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் 7.40 லட்சம் இழப்பீடு தொகை வழங்கினர். மீதமுள்ள தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்குவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் அந்த தொகையை ஒரு மாதம் ஆகியும் வழங்காத காரணத்தினால் அதே அரசு பேருந்து  2-வது முறையாக மீண்டும் ஜப்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!