கோவையில் விற்பனைக்கு வைத்து இருந்த கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

By Velmurugan s  |  First Published Mar 27, 2023, 2:52 PM IST

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

அதன் அடிப்படையில்  செட்டிபாளையம் பகுதியில்  கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட தனிப்படை   காவல் துறையினர் சம்பவ இடம் செட்டிபாளையத்திற்கு  விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை வைத்து இருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த  கோகுல்  மற்றும் திருச்சி மாவட்டத்தை  சேர்ந்த  கோகுல் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

Latest Videos

undefined

புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை; 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 1.100 கிலோ  கிராம் எடை உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ பொதுமக்கள் தயங்காமல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

புதுவையில் 11 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு; மீண்டும் பள்ளிகளை மூட பெற்றோர் கோரிக்கை

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்  தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!