வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.4000 லஞ்சம்... வசமாக சிக்கிய காவல் உதவி ஆய்வாளர்!!

By Narendran SFirst Published Mar 26, 2023, 5:12 PM IST
Highlights

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். 

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். கோவை அடுத்து சூலூர் அருகே  சந்தமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்  பஞ்சலிங்கம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவருடைய தாயார் தனலட்சுமி ஆகியோருக்கும் இடையே கடந்த 22 ஆம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜெயபிரகாஷ் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் என்பவர் பஞ்சலிங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு: சென்னை டூ கன்னியாகுமரி வரையில் மிதிவண்டி பயணம்!

பின்னர் இருதரப்பையும் அழைத்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை அடுத்து பஞ்சலிங்கத்தை மீண்டும் தொடர்புக்கொண்ட உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யாமல் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டு உங்களை காப்பாற்றியுள்ளேன் என்றும் இதற்காக எனக்கு லஞ்சமாக 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதுக்குறித்து பஞ்சலிங்கம் கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: குஜராத், தமிழ்நாடு இடையேயான பிணைப்பை சௌராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி!

இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பஞ்சலிங்கத்திடம் ரசாயன தடவிய நொட்டுகளை கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்திடம் இருந்து வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

click me!