சுந்தரி சீரியலில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா கணவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள டி நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்தப் பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கோவை பீளமேட்டு பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரம்யா பீளமேட்டில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சினிமா மீது இருந்த மோகம் காரணமாக கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற சந்திரசேகர் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரம்யா தற்போது சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இதற்கிடையில் குழந்தைகளை தனது அம்மா வீட்டில் விட்டு விட்டு ரமேஷை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், ரம்யா தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், எப்படியாவது அவரை கொலை செய்துவிட வேண்டும் என்றும் நண்பர் சந்திரசேகரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று முன் தினம் இரவு ரம்யாவும், ரமேஷூம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இருவரும் கீழே விழுந்த நிலையில், மர்ம நபர் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேட் மூலம் ரமேஷின் கை, கழுத்து, தலை பகுதிகளில் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடந்த உழவர் வயல் தின விழா..!நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு
பலத்த காயமடைந்த நிலையில் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையே ரம்யாவிடம் மேற்கொண்டனர். ரம்யாவின் மொபைல் போனிற்கு வந்த அழைப்புகள் வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணவரை கொலை செய்ய நண்பர் மூலம் திட்டமிட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரம்யா மற்றும் அவரது நண்பரான சந்திரசேகரன் இருவரையும் போலீசார் கைது செய்து மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொழிலதிபருக்கு காதல் வலை வீசி கார், பணம் கொள்ளை; கில்லாடி ஆசிரியை மீது கோவையில் வழக்கு