கோவையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை கைது செய்த ரத்தினபுரி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி பகுதியில் நெல்சன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஒரு நபர் photo album தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் நெல்சனின் கவனத்தை திசை திருப்பிய அந்த நபர் அவரது செல்போனை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
அந்த நபர் கடையில் இருந்து சென்ற பின்னரே தனது செல்போன் மாயமானதை நெல்சன் உணர்ந்துள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த ரத்தினபுரி காவல்துறையினர் விசாரணை செய்ததில், செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரியவந்தது. மேலும் இவர் காந்திபுரம் 100 அடி சாலையில் தங்கி அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருள் வாங்குவது போல் சென்று செல்போனை திருடி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
undefined
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்கள்
இவர் காந்திபுரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, சிவானந்த காலனி, ஆர் எஸ் புரம் போன்ற பகுதியில் இதே போன்று இதுவரை 60க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடியதாக தெரியவந்துள்ளது. இவர் திருடிய செல்போன்களை காந்திபுரத்தில் உள்ள 2 செல்போன் கடைகளில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.