Video: பிரதமர் மோடி படத்துக்கு முத்திட்டு நன்றி தெரிவிக்கும் வயதான விவசாயி!
பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் மோடி படத்துக்கு விவசாயி ஒருவர் முத்தமிட்டுக்கொண்டே நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த வயதான விவசாயி ஒருவர் பேருந்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்திற்கு முத்தமிட்டு உருக்கமாகப் பேசும் காட்சி வைரலாகப் பரவிவருகிறது.
கர்நாடக மாநில அரசுப் பேருந்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஜி20 மாநாட்டின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அந்தப் படத்திற்கு வயது முதிர்ந்த விவசாயி ஒருவர் முத்தமிட்டுக்கொண்டே பாராட்டு மழை பொழிந்தபடி நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பேருந்தின் வெளிப்புரத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பார்த்தபடி பேசும் விவசாயி, முதியவர்களுக்கு தபால் கணக்கில் 1000 ரூபாய் தருவதாகக் கூறி, பின் அதனை மேலும் 500 ரூபாய் உயர்த்தினார் என்றும் உடல்நலத்திற்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கி இருக்கிறார் என்றும் கூறுகிறார்.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பதற்கு சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு
கர்நடாக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைப் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் அட்டவணையை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி எண்ணப்படும் என்று கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மற்றொரு மோதலுக்கு களம் அமைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பாஜக முயற்சி செய்ய உள்ளது. வரும் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் பெற காங்கிரஸ் போராட உள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில்லை. அந்த வரலாற்றை மாற்றி அமைக்க பாஜக தீவிரமாக உள்ளது.
ராகுல் காந்தியைச் சும்மா விடமாட்டேன்! வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி சவால்!