Asianet News TamilAsianet News Tamil

தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பதற்கு சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு

தன்பாலின உறவு கொண்டவர்களுக்கு இடையேயான திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க சிறுபான்மை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Various religious and minority organisations oppose same sex marriage
Author
First Published Mar 29, 2023, 9:33 PM IST

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரர், திருமணம் செய்துகொள்ள தகுந்தவரைத் தேர்வு செய்யும் உரிமை LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் இல்லாமல் இருப்பது சமத்துவம், வாழ்வுரிமைக்கு எதிரானது; அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 21-ஐ மீறியதாகும்" என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகள் தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் வழங்கக் கோரும் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. சிஷ்டி மன்சில் சூஃபி கான்கா, கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா, அகில இந்தியா பாஸ்மாண்டா முஸ்லீம் மஹாஜ், இந்திய தேவாலயங்களின் சமூகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்... கண்டுகொள்ளாத ராகுல்! காரணம் இதுதான்!!

அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம் மசாஜ் அமைப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆண்களும் பெண்களும் குடும்பக் கட்டமைப்பின் அங்கமாக உள்ளனர் எனவும் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது இந்தத் திருமண முறைக்கு மரண அடியாக அமைந்துவிடும் எனவும் கூறியுள்ளது. மேலும், பழங்கால கலாச்சாரம் கொண்ட நாடு இந்தியா பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டது; திருமணம் என்பது பாலியல் இன்பத்தை அடைவதை மட்டும் குறிக்காது; அது எதிர்கால சமூக அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறி தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Various religious and minority organisations oppose same sex marriage

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கோரிய மனு பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று இந்திய தேவாலயங்களின் சமூகம் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிப்பது எங்கும் பொருந்தாது; இதனை நாங்கள் ஏற்கவில்லை எனக் கூறியுள்ளது.

குனோ பூங்காவில் 4 குட்டிகளை ஈன்ற நமீபியா சிறுத்தை! வைரலாகும் அழகிய காட்சி!

ஓரினச்சேர்கைக்கு அங்கீகாரம் கோரும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் கோரியது. இதன்படி மத்திய அரசுக்கு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தன்பாலின திருமணங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்க முடியாது என்று கூறப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு தன்பாலினச் சேர்க்கையை குற்றமற்றதாகக் கருதுகிறபோதும், தன்பாலின திருமணத்திற்கு அடிப்படை உரிமை என்ற வகையில் சட்ட அங்கீகாரம் கோர முடியாது எனவும் மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

புகழ்பெற்ற ஓவியர், சிற்பக் கலைஞர் விவான் சுந்தரம் காலமானார்

Follow Us:
Download App:
  • android
  • ios