Asianet News TamilAsianet News Tamil

குனோ பூங்காவில் 4 குட்டிகளை ஈன்ற நமீபியா சிறுத்தை! வைரலாகும் அழகிய காட்சி!

கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து குனோ தேசியப் பூங்காவுக்கு வந்த சிறுத்தைகளில் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருக்கிறது.

Four healthy cheetah cubs born in Kuno National Park
Author
First Published Mar 29, 2023, 3:34 PM IST

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவுக்கு புதிய சிறுத்தை குட்டிகள் வந்துள்ளன. அங்குள்ள சியாயா என்ற சிறுத்தை நான்கு குட்டிகளை புதிதாக ஈன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த சிறுத்தைக் குட்டிகள் நான்கும் நல்ல நிலையில் உள்ளன என்றம் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குனோ பூங்காவில் சிறுத்தைப் பாதுகாப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் புதிய சிறுத்தைக் குட்டிகள் பிறந்துள்ளது பற்றி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் தங்கள் புதிய சூழலுக்கு நன்கு ஒத்துப்போகின்றன என்பதற்கு புதிய குட்டிகள் பிறந்திருப்பது ஒரு நேர்மறையான அறிகுறியாகும்.

இந்தியாவின் வனப்பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சிறுத்தைகள் எண்ணிக்கையை அதிகரித்து இந்திய வனப்பகுதிகளை மீண்டும் சிறுத்தைகளுக்கு ஏற்ற வசிப்பிடமாக மாற்ற குனோ பூங்கா முயற்சி செய்துவருகிறது.

குனோ தேசிய பூங்காவில் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட எட்டு சிறுத்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தச் சிறுத்தைகள் நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவுக்கு அழைத்துவரப்பட்டன.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பூங்காவில் உள்ள சிறுத்தைகளைப் பார்வையிட்ட சௌகான், "அவை இந்திய தட்பவெப்பச் சூழல்நிலைக்கு ஏற்ப மாறியிருக்கின்றன. நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளன. நன்றாக வேட்டையாடி வருகின்றன." என்று கூறினார். முன்னதாக பிரதமர் மோடியும் குனோ பூங்காவுக்குச் சென்றபோது நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளைப் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios