கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார்.
கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார். இதுக்குறித்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 இன் பிரிவு 32 (4) மாமன்றத்திற்கு ஆணையாளரின் அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1) ன்படி மூன்று கூட்டங்களில் பங்கேற்க வில்லை எனில் உள்ளாட்சி பதவி பறிபோகும்.
இதையும் படிங்க: வெயில் தொல்லை தாங்கலயா.. கவலைப்படாதீங்க.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
undefined
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4)ன்படி மூன்று கூட்டங்களில் கவுன்சிலர் நிவேதா பங்கேற்காதது குறித்தும் மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு,அதற்கு மாமன்ற உறுப்பினர் நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதையும் மாநகராட்சி ஆணையர் அடுத்த மாமன்ற கூட்டத்தில் வெளியிடுவார். அதன் அடிப்படையில் மாநகராட்சி மன்றம் அடுத்த கூட்டத்தில் நிவேதா கவுன்சிலராக தொடர்வது குறித்து இறுதி முடிவு செய்யும்.
இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!
97 வது திமுக கவுன்சலராக இருந்து வருபவர் நிவேதா. இளம் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி,மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடந்த மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை. முன்னாள் கோவை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சேனாதிபதியின் மகள் நிவேதா. மேயருக்கான போட்டியில் இருந்த அவர் மூன்று கூட்டங்களில் பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதி இழக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.