பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் அருகே 100அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி மது அருந்திவிட்டு மயக்க நிலையில் இருந்த மது பிரியர் நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த செமனாம்பதி பகுதியைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லக்ஷ்மணன் (வயது 45). இவர் ஆனைமலை சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அந்த பணத்தை வைத்து மது அருந்திவிட்டு ஆங்காங்கே தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் ஆனைமலை அடுத்த ஜமீன் கோட்டாபட்டி பிரிவு அருகே மது அருந்திவிட்டு இடுப்பில் ஒரு மது பாட்டிலை வைத்துக் கொண்டு அருகே இருந்த 100அடி உயரமுள்ள பனை மரத்தில் மது போதையில் ஏறியுள்ளார்.
பனைமரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடுப்பில் இருந்த மது பாட்டிலை மரத்தில் இருந்தபடியே அருந்தியுள்ளார். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில் பனை மரத்தின் உச்சியிலேயே மயங்கி விட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி; 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மது போதையில் இருந்த இவரை கயிறு கட்டி இறக்குவது முடியாத காரியம் என கருதி உடனடியாக கிரேன் வரவழைத்து கிரேன் உதவியுடன் மது பிரியர் லட்சுமனை மூன்று மணிநேரம் போராட்டத்துக்குப் பிறகு மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக செயல்பட்டு அவரை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Crime News: மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை