கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு ரூ. 1.9 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பயணிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கோவைக்கு வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது. இதில், சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களை தனியாக அழைத்த கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர்.
undefined
இதையும் படிங்க;- சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்! 3 பேர் அதிரடி கைது! என்ன காரணம் தெரியுமா?
அப்போது அந்த பயணிகள் பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் உள்ளாடைகளின் அடுக்குகளுக்கு இடையே பதிக்கப்பட்ட இருந்த வெளிநாட்டு தங்கம் 3.03 கிலோ எடை உள்ள சுமார் ரூபாய் 1.9 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த நான்கு பயணிகள் அரை கிலோவிற்கு அதிகமான தங்கத்துடன் இருவர் பிடிபட்டனர்.
பிடிபட்ட நபர்கள் விசாரணை நடத்திய போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன்(27), சென்னையை சேர்ந்த சேக் முகமது(31) என்று இரண்டு பயணிகளை கைது செய்தனர். இது குறித்து மேலும் உளவுத்துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- நான் உன்னால தான் மூணு மாசம் கர்ப்பமா இருக்கேன்! கல்யாணம் பண்ணிக்கோ! டார்ச்சர் செய்த காதலியை கொன்றேன் பகீர்