Watch : குதிரை வாங்க பணம் கிடைக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

Published : May 13, 2023, 04:48 PM IST
Watch : குதிரை வாங்க பணம் கிடைக்காததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சுருக்கம்

பொள்ளாச்சிஅடுத்த மஞ்சநாயக்கனூரில் குதிரை வாங்க பணம் கேட்டு கிடைக்காகததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையை மஞ்சநாயக்கனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கோமகன பிராந்த், 24 வயதான இவருக்கு குதிரை மீது அலாதி பிரியம் இருந்ததால் அவர் தனது தந்தை பாலசுப்பிரமணியத்திடம் தனக்கென சொந்தமாக ஒரு குதிரை வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மோகனபிரசாத் தந்தை குதிரை வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் விரக்தி அடைந்த மோகனபிரசாத் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகன் தூக்கிட்டுக்கிடந்ததை் கண்ட பெற்றோர், மோகனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.



அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆழியார் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

குதிரைக்காக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?