கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை

By Velmurugan sFirst Published Feb 7, 2023, 11:41 AM IST
Highlights

கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகளை அழித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான  அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி  கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் நண்பர்களான இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களை காவலில் எடுத்து  NIA அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதில் 7 பேர் என்.ஐ.ஏ.,வின் விசாரணையில் காவலில் உள்ளனர். இந்நிலையில், தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் உயரிழந்த ஜமேஷா முபினின்  மனைவியிடம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்   வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜமேசா முபின் வீடு உள்பட இரண்டு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகளான பொட்டாசியம் நைட்ரேட் பவுடர்,  சிவப்பு பாஸ்பரஸ், பெட்டன் பவுடர், அலுமினியம் பவுடர், சல்பர் பவுடர், இரண்டு மீட்டர் வெடி மருந்து திரி, நைட்ரோ கிளிசரின், ஆக்சிஜன் சிலிண்டர், 9 ஓல்டு பேட்டரி கிளிப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இவை வெடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த பொருள்களை ஆயுவகத்துக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிந்ததும் அந்த பொருள்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் கோவையில் உள்ள முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இதை அடுத்து அவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்துகளை வெடிபொருள்கள் எடுத்துச் செல்லும் சிறப்பு வாகனத்தில் கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி கந்தபாளையத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான வெடி மருந்து குடோனில் எடுத்துச் சென்றனர்.

கண்ணகிக்கு ஒற்றை சிலம்பு; எனக்கு ஒற்றை செங்கல் - மதுரையில் உதயநிதி பேச்சு

இங்கு 120 கிலோ வெடி மருந்துகள் அனைத்தும் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அந்த குடோனில் பெரிய அளவில் குழி  தோன்றினார்கள். அதைத் தொடர்ந்து சல்பர் பவுடர் மற்றும் வெடி மருந்துகளை மணலில் கலந்து தீயிட்டு அழித்தனர். இந்த மருந்துகளை அழிக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடோனில் வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.

மது போதையில் காட்டு யானைகளுடன் மல்லுக்கட்டும் வாகன ஓட்டிகள்

click me!