கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் மனைவி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் மனைவி நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை உக்கடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த அக்.23 ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதுக்குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இது பயங்கர அமைப்பின் செயல் என தெரியவந்தது.
இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் கிடந்த நாயின் சடலம்... அதிர்ச்சி அடைந்த மக்கள்... சிவகாசியில் பரபரப்பு!!
undefined
இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தற்பொழுது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியதன் எதிரொலி.... தமிழகத்திற்கு குழுவை அனுப்பியது மத்திய அரசு!!
இந்த நிலையில் முதல் குற்றவாளியாக விளங்கும் ஜமேஷா முபினின் மனைவியிடம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜே.எம்.4 வது நீதிமன்றத்தில் ஜமேஷா முபினின் மனைவி வாக்குமூலம் அளித்தார். அவருக்கு வாய் மற்றும் காது கேளாததால் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.