கோவையில் 21 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் கைது

By Velmurugan s  |  First Published Feb 6, 2023, 5:11 PM IST

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வடமாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 21 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் வடமாநில இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி பகுதியில் வட மாநில இளைஞர்கள் மூலமாக கஞ்சா சாக்லேட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்க்கு ரகசிய கிடைத்தது. தகவலின் அடிப்படையில்  அப்பகுதியில் தனிப்படை அமைத்து தீவிர தேடல் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் எஸ்,ஐ குப்புராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சோதனையின் போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த நபரை நிறுத்தி அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாக்லேட் பாக்கெட்டுகளும்  ஒரு பொட்டலமும் இருந்தது அதனை காவல் துறையினர் பிரித்துப் பார்த்தபோது இரண்டரை கிலோ அளவுள்ள சாக்லேட்டுகளில் கஞ்சா கலந்திருந்த போதை சாக்லேட்டுகளும் இருப்பது தெரிய வந்தது. 

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சஹான்  என்பவரின் மகன் மகேஷ் குமார் 37 வயது என்பதும், பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட் மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மகேஷ் குமாரிடம் இருந்து  21 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் இரண்டரை கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

தமிழ் காவியங்களை ஓவியமாக காட்சிபடுத்தும் கோவை மாநகராட்சி; பொதுமக்கள் பாராட்டு

மேலும் அந்த நபரை கைது செய்த தனிப்படை காவல் துறையினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருமத்தம்பட்டி காவல் துஐறயினர் வட மாநில நபர் மீது வழக்கு பதிவு செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வட மாநில நபர்களை குறிவைத்து வட மாநிலத்திலிருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் கடத்தி வந்து சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது  இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாசாணியம்மன் கோவில் தீமிதி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

click me!