Coimbatore: கோவையில் இயற்கை விவசாயத்தை பார்வையிட வந்த அமெரிக்க மாணவர்கள்

By SG Balan  |  First Published Feb 7, 2023, 10:52 AM IST

அமெரிக்கவில் படிக்கும் பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயம் பற்றி அறிந்துகொள்ள கோவைக்கு வந்துள்ளனர்.


கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமப் சின்ன தடாகம். இங்கு பேராசிரியர் சி. ஆர். ஜெயப்பிரகாஷ் ரெட்வுட்ஸ் என்ற இயற்கை விவசாயப் பண்ணையை நடத்திவருகிறார். கடந்த பத்து வருட காலமாக ரசாயனமற்ற விவசாயம் செய்துவருகிறார். இதனால் கீரை, காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவை அதிக அளவில் மகசூல் செய்யப்படுகின்றன.

இவரது இயற்கை விவசாய முறையை அறிந்துகொள்ள ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் தனது விவசாயப் பண்ணையை சுற்றிக் காட்டி இயற்கை விவசாய முறைகளை விளக்குகிறார்.

Latest Videos

undefined

வார விடுமுறை நாட்களில் வருகைதரும் இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு இயற்கை வேளாண்மை, மறுசுழற்சிமுறை விவசாயம், மண்புழு உரம், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம், கோழிப்பண்ணை போன்றவற்றை குறித்து எடுத்துரைக்கிறார்.

முதலில் தனது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் கூடுவதற்கான இடமாக இருந்தது, பின்னர் பலதரப்பட்ட பார்வையாளர்களும் வரும் இடமாக மாறியது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாணகாணத்தில் உள்ள இல்லினாய்ஸ், டல்லாஸ் மற்றும் ஆஸ்டின் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஜெயப்பிரகாஷ் அவர்களின் பண்ணையைப் பார்வையிட வந்துள்ளனர்.

Coimbatore Metro: கோவை மெட்ரோ திட்டம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ. அப்டேட்!

அமெரிக்காவில் இயங்கிவரும் சின்மயா கல்வி நிறுவனத்தின் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் இந்தியாவில் இயற்கை விவசாயம் பற்றி அறிந்துகொள்வதற்காக வருகை இங்கு வருகைதந்துள்ளனர்.

“புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் கூறுகிறார். “அவர்களின் நாட்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஒரே பயிர்கள் மட்டுமே இருப்பதைப் பார்த்தவர்கள், இங்கு ஒரே இடத்தில், சிறிய பண்ணையில் விதவிதமான மரங்கள், பறவைகள் இருப்பதைப் பார்த்து வியந்தனர். இரண்டு மணிநேரத்தில் உரையாடி அவர்கள் நடுவில் தங்கள் மொபைல் போனை கையில் எடுக்கவே இல்லை” என்று ஆச்சரியத்துடன் சொல்கிறார் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ்.

“ஆர்கானிக் விளைபொருட்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைத்தாலும், ஆர்கானிக் ஸ்டோர்கள் அதிகம் இல்லாததால், உற்பத்தியும், விற்பனையும் சிரமமாக உள்ளது. மேலும், குறைந்த அளவில் விற்பனை செய்பவர்களும் வாங்குவது பிரச்னையாக உள்ளது” என்கிறார் கீதா ஜெயபிரகாஷ்.

தங்கள் பண்ணைக்கு அதிக பார்வையாளர்கள் வருவதை வரவேற்பதாகக் கூறும் கீதா – ஜெயப்பிரகாஷ் தம்பதி, “அதிகம் பேர் வந்தால், சமூகத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு பெருகும்” என்றும் சொல்கிறார்கள்.

தமிழ் காவியங்களை ஓவியமாக காட்சிபடுத்தும் கோவை மாநகராட்சி; பொதுமக்கள் பாராட்டு

click me!