சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகள் நேரில் அழைத்து வரப்பட்டு விசாரணை

By Velmurugan s  |  First Published Sep 27, 2023, 3:48 PM IST

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகியோரை அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 12வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரையும், 13வது நபராக அசாருதீன் என்பவரையும் கைது செய்தனர். 

இது அசாருதீன் கொச்சி சிறையில் வேறு ஒரு வழக்கில் இருப்பதும் சிறையில் இருந்தபடி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் இறுதியாக கைது  செய்யப்பட்ட  இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரியில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மத்திய பிரதேசத்திற்கு மாற்றப்படும் அண்ணாமலை; விரைவில் புதிய தலைவர் - எஸ்.வி.சேகர் பகீர் தகவல்

இதனையடுத்து இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் இல்லங்களுக்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பின்னர், கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். இரு வாகனங்களில் இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகிய இருவரையும் அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் வாங்குவது போல் நடித்து திருட்டு; 3 காவல் நிலைய போலீசாரை அலறவிட்ட மனநலம் பாதித்தவர்

click me!