திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜக நிர்வாகி அட்டூழியம்!

By Velmurugan s  |  First Published Sep 25, 2023, 8:39 PM IST

கோவை மாவட்டத்தில் திருநங்கைகள் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் இடித்து நொறுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவர் பாஜகவின் சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்.  இவருக்கு சொந்தமான வீடு மயிலம்பட்டி பகுதியில் உள்ளது. இந்த வீட்டை ஏஞ்சலினா மற்றும் 2 திருநங்கைகளுக்கு வாடகைக்கு குடியமர்த்தி உள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 5 வருடங்களாக திருநங்கைகள் அங்கு குடியிருந்து வரும் நிலையில்  மனோன்மணி அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். திருநங்கைகள் தாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி தந்தால் காலி செய்வதாக கூறியுள்ளனர். தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக இது போன்ற பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் திருநங்கைகள் பிரச்சினை தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்ட புகார்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு விவகாரம்; ஒற்றை வரியில் பதில் அளித்த அண்ணாமலை

இந்நிலையில் சம்பவத்தன்று ஏஞ்சலினா சந்தைக்கு சென்றிருந்த நிலையில்  மனோன்மணி 4 அடியாட்களுடன் சென்று திருநங்கைகள் குடியிருந்த வீட்டின் சிமெண்ட் கூரைகளை பிரித்து துவம்சம் செய்துள்ளார். இதுகுறித்து திருநங்கைகள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விடிய விடிய பெய்த தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற சூலூர் காவல் துறையினர் மனோன்மணியால் அழைத்துச் செல்லப்பட்ட அடியாக்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அடியாட்கள் திருநங்கைகள் தங்கி இருந்த வீட்டை உடைத்து நொறுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!