சொன்னதை செய்த ஸ்டாலின்: கோவை சாலைகளில் ஆய்வு!

By Manikanda Prabu  |  First Published Sep 24, 2023, 1:36 PM IST

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

மேலும், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.

Tap to resize

Latest Videos

மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்: கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின்!

அத்துடன், சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில், கடந்த 21ஆம் தேதி சென்னை, மாநகரில் சாலைப் பணிகளை பார்வையிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று,  கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

click me!