கோவையில் கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் மாணவரை சக மாணவர்களே கொடூரமமாக தாக்கிய சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையாம் பாளையம் பகுதியில் நேரு கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அதே கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படிக்கும் அணாஸ் என்ற மாணவர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சக கல்லூரி மாணவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கல்லூரி முடிந்ததும் அனாஸ் மரப்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்த போது ஏற்கனவே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவரை சக கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அனாஸ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சக மாணவர் தாக்கப்பட்ட தகவலை அறிந்த மற்ற மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினைக்கு கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது காவல் துறையினர் அங்கு குவிந்து வரும் கல்லூரி மாணவர்களை கலந்து செல்ல வலியுறுத்தி வருகின்றனர். மேலும் காயம் ஏற்பட்ட மாணவர் அனாசிர்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.