Annamalai: கோவையில் முதல்வரே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் வெற்றி பெறுவது நாங்கள் தான் - அண்ணாமலை சவால்!!

By Velmurugan s  |  First Published Mar 23, 2024, 9:20 AM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் வரட்டும், முதல்வரே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் பாஜக தான் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதியில் 3 வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும், தர்மத்திற்குமான போட்டி.

தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக தான் வெற்றி பெறும். திமுகவின்  எல்லா அமைச்சர்களும் வரட்டும் நாங்கள் தயார். தமிழக அரசின் மாற்றம் கோவையில் இருந்து துவங்க வேண்டும். கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல,  இன்டர்நேசனல் மேப்பில் பதிய வைக்க போகின்றோம். இது சரித்திர தேர்தல். 39 தொகுதிகளிலும் தமிழகத்தில் வென்று, ஜூன் 4ம் தேதி தமிழகத்தில் இருந்து சரித்திரம்  ஆரம்பமாகும்.

Tap to resize

Latest Videos

சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் தான் விருப்பம். மோடி அவர்கள் உத்தரவிட்டதால் போட்டி இடுகிறேன். மோடி அவர்களின் உத்தரவை மதிக்க தெரிந்தவன். 2026 பாஜக ஆட்சி அமைக்கும் பொழுது எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கின்றது என்பதை காட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும். மோடியின் உத்தரவிற்கு நான் கட்டுப்பட்டவன். என்னுடைய அரசியல் தமிழகத்தில் இருக்க வேண்டும்.

மோடி தமிழகத்திற்கு அடிக்கடி  வருவது 2026ல்  ஆட்சிக்கு வருவதற்காகதான். கோவையை அடிப்படையில் இருந்து மாற்ற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி எதற்காக தனியாக 23 இடத்தில் போட்டியிட வேண்டும்? அந்தப் பகுதிகளை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக தான். வளர்ச்சி என்றால் என்ன என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவே போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்கு பிடிக்காது. போக மாட்டேன்.

தமிழகத்தில் 2026ல் ஆட்சி வரவேண்டும் என்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாக தமிழக அரசியலை மாற்றுவது மட்டுமில்லாமல், நிஜ வளர்ச்சி என்ன என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டப் போகின்றோம். தெளிவான பார்வையோடு இருக்கின்றோம். பிரதமருக்கு 80 சீட் உத்தரபிரதேசத்தில் இருக்கிறது. இன்னும் அவர் அந்த பக்கம் போகவில்லை. வடமாநிலங்கள் பக்கம்  இன்னும் போகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏதாவது ஒரு தலைவர் வெளிநாட்டு பயணம் போய் இருப்பார்களா?  

அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்

2024ல்  கிடைக்கும் எம்பி மூலம் 700 நாட்கள் களப்பணியாற்றுவோம்.  அதனை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026ல் பெட்ரோல், டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றார் திமுக தேர்தல் அறிக்கையை பயன் படுத்துங்கள்.

2019 ல் கொடுத்த 295 வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு  2024 தேர்தலுக்கு வந்திருக்கின்றோம். எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின் பொழுது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு,  கோபாலபுரத்தோடு என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது.

கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள்.  பணத்தை கொண்டு வந்து நூற்றுகணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கின்றோம். செலவு குறைந்த தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். அடுத்த 40 நாட்கள் பூத கண்ணாடி போட்டு ஊடகங்கள் எங்களை  பார்க்க வேண்டும். 33 மாதமாக சம்பாதித்த ஆயிரகணக்கான கோடி பணத்தை இங்கு வந்து திமுகவினர் செலவு செய்வார்கள்.  பா.ஜ.க ஒரு தேர்தலிலும் விதிமீறலில் ஈடுபடாது.

எங்களது 19 வேட்பாளர்கள் பெயர்களை பாருங்கள். அவர்களது தகுதிகளை பாருங்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றதா என்பதை பார்க்கவும். பிற கட்சிகளில் வலை வீசி வேட்பாளர்களை தேடுகின்றனர்.  மாற்றுகின்றனர். இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றுவார்கள். தரும்புரி வேட்பாளராக சௌமியா அன்புமணி  நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். சுற்றுச்சூழலில் நிறைய பணிகளைச் செய்திருக்கிறார். எல்லோருடைய அனுபவம் தமிழக அரசியலுக்கு வரவேண்டும். அதன் மூலம் தமிழகத்துக்கு வளர்ச்சி இருக்க வேண்டும். சௌமியா அன்புமணிக்கு வாழ்த்துக்கள்.

2024 தேர்தலில் தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணியை கொண்டு வர வேண்டும். பாரத பிரதமரின் ரோடுஷோவை லட்சக்கணக்கானோர் பார்க்க வருகின்றனர். அந்தப் பகுதியில்  விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். அந்த குழந்தைகள் விடுமுறை கொடுக்கப்பட்டதால்   தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர்.  விடுமுறை விட்டது யார்? பிரதமர் வரும் பாதையில் விடுமுறை அளித்த பிறகு மாணவச் செல்வங்கள் பிரதமர் பார்ப்பதற்காகதான் வந்தார்கள். பாரதப் பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி மாதிரி பார்க்காதீர்கள். அவர் விஸ்வ குரு என்றார்.

click me!