தேர்தலுக்கு பின் சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது; அண்ணாமலையை மறைமுகமாக பங்கம் செய்த அமைச்சர்

By Velmurugan s  |  First Published Mar 22, 2024, 11:37 AM IST

கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரின் அறிமுகக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் நடைபெற்றது.


கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் காளப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tap to resize

Latest Videos

நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் பிரியாணி போட வேண்டும் என்று சொன்னேன். இப்பதான் செய்தியில் வந்துச்சு, மட்டன் பிரியாணியாமே என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்பி ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மின்னிக் கொண்டிருக்கும் வேளையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு இந்திய மக்களிடம் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி மகத்தான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளும் முயற்சிமேற்கொண்டு இருக்கின்றன. 

Admk Manifesto : அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி.! முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா.?

தமிழகத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக்கு வழி சேர்க்கும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணியில் வேட்பாளர் மகத்தான வெற்றியை தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்து இருக்கிறது. எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள். 

எல்லோருக்கும் எல்லாம் என்பார். அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை தமிழக மக்கள் கண்டிருக்கிறார்கள். எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜகவின் தேசிய தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள். 

இதனை சாதாரண ஒரு தேர்தலாக பார்க்க கூடாது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிக்கிறதே தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாநிலத்தை எவ்வளவு புறக்கணித்து வருகிறார்கள். எதை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்பார்கள். மத ரீதியாகவும், ஜாதிய ரீதியாகவும் பிளவுபடுத்துவதை தவிர வேறு என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். இந்த வளர்ச்சியை இந்த பகுதிக்கு கொடுத்து இருக்கிறேன் என்று எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள்? ஆனால் திமுகவினர் மகளிர் உதவித்தொகை, நான் முதல்வன் என்ற மகத்தான திட்டத்தையும், காலை உணவு திட்டத்தையும், கோவைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கப் போகிறோம் என புதிய விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை பேச முடியும். 

ஷாக் கொடுத்த அன்புமணி..! கடலூர் பாமக வேட்பாளராக களம் இறங்கும் இயக்குனர் தங்கர் பச்சான்- யார் இவர்.?

மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறோம்.  ஏற்கனவே தொழில் வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம். ஏறத்தாழ 10 லட்சம் கோடியை மூன்றை ஆண்டுகளில் கொண்டு வந்து கொடுத்த முதல்வர் எங்களிடம் இருக்கிறார். மகத்தான வளர்ச்சியை கோவைக்கும் திட்டம் என்று நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள் எதிரே இருப்பவர்கள் எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். வடையும் அல்வாவையும் தான் மக்களுக்கு கொடுக்கிறார்கள் தவிர வேறு எதையும் செய்யவில்லை. எல்லா இடத்திலும் ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவையும், மோடி சுட்ட வடையும் பற்றி மக்களிடம் கூறியிருக்கிறோம். எல்லோரும் மத்திய அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு ஒட்டுமொத்த தொகுதிகளும் நிச்சயமாக இண்டியா கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஜனநாயகத்தின் ஒரே பாதுகாவலனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். 

முதலில் அதிமுக இருக்கிறதா?  இருந்தால் அதைப் பற்றி பேசலாம்.  அதிமுகவும், பாஜகவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அதிமுக எங்கே வேலை செய்கிறது என்ற கேள்வியும் இருக்கிறது. கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்து இந்தக் கேள்விக்கான பதில் அமையும் என தெரிவித்தார்.

click me!