பாஜகவும், திமுகவும் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான் - வேலுமணி

By Velmurugan s  |  First Published Mar 22, 2024, 11:11 PM IST

மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கோவைக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை பாராளுமன்ற தொகுதிக்கு ராமச்சந்திரனையும், பொள்ளாச்சி தொகுதிக்கு கார்த்திக் அப்புசாமியையும், நீலகிரி பாராளுமன்றத்திற்கு லோகேஷ் தமிழ்ச்செல்வனையும் அறிவித்துள்ளார்கள். 40 தொகுதிகளுக்கும் விலவங்கோடு இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா திமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைத்து உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக, இந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக அண்ணா திமுகவில் வெற்றி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

அடங்காபிடாரியாக செயல்படும் அமலாக்கத்துறையை நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

கண்டிப்பாக வெற்றி உறுதி. களத்தில் உள்ள வெற்றி வேட்பாளர்கள் படித்தவர்கள். சிறப்பான வேட்பாளர்கள் மட்டுமல்லாது 31 ஆண்டுகள் ஆளுகின்ற கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி உள்ளிட்ட மூன்று பாராளுமன்ற தொகுதிகளிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ஆகியோர் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை தந்து 50 ஆண்டுகளில் இல்லாத  வளர்ச்சியை கொடுத்து இன்று அத்திக்கடவு அவினாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி, கூட்டக் குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சாலைகள், அதிகமான கல்லூரிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

மிகப்பெரிய வளர்ச்சியை அண்ணா திமுக கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு எந்த திட்டத்தையும் இங்கே கொண்டு வரவில்லை. பொதுமக்கள் இன்று தெளிவாக இருக்கின்றனர். அண்ணா திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தெளிவாக இருக்கும் சூழலில் மூன்று வேட்பாளர்கள் மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு உட்பட 40 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

நீதிக்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் விஸ்வரூபம் எடுப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்

மேலும் இந்த வெற்றி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்து எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார். மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகமும் ஆட்சியில் இருக்கின்றன. ஆனால் கோவை மாவட்டத்திற்கு திட்டங்கள் தந்தது எல்லாம் அண்ணா திமுக தான். பெட்ரோல், டீசலை பற்றி திமுக பேசக்கூடாது. எந்த வாக்குறுதியையும் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக நிறைவேற்றவில்லை. 

அண்ணா திமுக வாக்குறுதி தந்தால் கண்டிப்பாக நிறைவேற்றும். 37 எம்பிக்கள் கடந்த 2014 இல் அம்மா தலைமையில் வெற்றி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாடாளுமன்றத்தையே 28 நாட்கள் முடக்கினர். 38 எம்பிக்கள் திமுகவில் இருந்தும் எதுவும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் உரிமையை மீட்க அண்ணா திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரிமையை மீட்டெடுப்பார்கள். 

எங்களுக்கு வெற்றி உறுதி. சொன்னதை செய்யக்கூடிய இயக்கம் அண்ணா திமுக. அதே போல் சொன்னதை செய்யக்கூடிய எங்களுடைய தலைவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் என்றார்.

click me!