கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை பணியாளர்களை துரத்தியதில், கீழே விழுந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் நடமாட்டம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரம் பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மருதமலை, சோமையம்பாளையம், பகுதியில் 13 யானைகள் முகாமிட்டுருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டினர். இந்நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முட்புதரில் யானை நிற்பதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர்.
undefined
பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத சோகம்; சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
அப்போது திடீரென ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க விரட்டி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் சண்முகம் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலாளி சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் இருந்ததால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் அனைத்து யானைகளும் வனப் பகுதிக்குள் சென்ற நிலையில் வனப் பணியாளர்கள் யானை கணக்கெடுப்பு பணிக்காக சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
கோவையில் 10 வயது சிறுமியை கழுத்து, தோள் என 5 இடங்களில் கடித்து குதறிய வளர்ப்பு நாய்; சிறுமி படுகாயம்
யானைகள் குடியிருப்பு அல்லது தனியார் நிலத்தில் நிற்பதை அறிந்த காவலாளிகள் அதனை விரட்ட முயற்சி மேற்கொண்ட நிலையில் யானை அவர்களை துரத்தியதால் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ஏற்கனவே வனத்தை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றாததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.