Latest Videos

சவுக்கு சங்கரை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டுக்கு 1 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு

By Velmurugan sFirst Published May 23, 2024, 4:38 PM IST
Highlights

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் 5 நாட்கள் காவலில் விசாரிக்க வேண்டுமென மனு அளித்திருந்தனர். காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் இரண்டாவது நபராக பெலிக்ஸ் ஜெரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு; திடீரென எண்ட்ரி கொடுத்த மாணவி ஸ்ரீமதியின் தாயார்

இந்த நிலையில் இன்று திருச்சியில் இருந்து அழைத்துவரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு மனு ஏற்கப்பட்டது. பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

Breaking: பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத சோகம்; சிவகாசியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

இந்நிலையில் நாளை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும், 6 மணி நேரத்துக்கு ஒருமுறை வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து தற்போது யூடியூப் சேனலில் நேர்காணல் எடுத்த எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

click me!