வாங்கும் பணத்திற்கு தரமான உணவு வழங்குங்கள்; பாரதியார் பல்கலை மாணவிகள் போராட்டம்

By Velmurugan s  |  First Published Feb 22, 2023, 1:52 PM IST

விடுதியில் தங்குவதற்காக மாதம் ரூ.3 ஆயிரம் பணம் கட்டியும் தரமான உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டி பாரதியார் பல்கலைக்கழக விடுதி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக விடுதி  மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இதில் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். 

கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி

Latest Videos

undefined

விடுதி மாணவிகளுக்கு உணவு, தங்கும் இடம் போன்ற வசதிகளுக்கு மாதம் தலா ரூ.3 ஆயிரம் வரையில் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் குறிப்பாக பெண்கள் தங்கி பயில கண்ணம்மா, பெரியார், வாசுகி என்ற புரட்சிகரமான பெயர்களில் மூன்று விடுதிகள் உள்ளன. ஒரு விடுதயில்  400 முதல் 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 1,500 மாணவர்கள் உள்ளனர். 

இந்த மூன்று விடுதிகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் சமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகளுக்கு தினமும் கொடுக்கப்பட்டும் உணவு தரமானதாக இல்லை எனவும், இது குறித்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதம் மட்டும் சரியான முறையில் சமைத்து கொடுத்ததாகவும் தற்போது மீண்டும் பழைய நிலவில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 

இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அமர்ந்து கையில் பதாதைகள் ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் மீண்டும் வகுப்புகளுக்குச் சென்றனர்.

click me!