கோவையில் காருக்குள் ஒய்யாரமாக தூங்கிய போதை ஆசாமி; கண்ணாடியை உடைத்து பாடம் புகட்டிய மக்கள்

Published : Feb 21, 2023, 03:58 PM IST
கோவையில் காருக்குள் ஒய்யாரமாக தூங்கிய போதை ஆசாமி; கண்ணாடியை உடைத்து பாடம் புகட்டிய மக்கள்

சுருக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  மேட்டுப்பாளையம் சாலையில் காரை நிறுத்தி குடி போதையில் காருக்குள்ளேயே உறங்கிய நபரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வழக்கமாக காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் கார் சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் உள்ளே பார்த்தபோது ஒரு நபர் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்ப முற்பட்டனர். காவல்துறையினர் முன்னிலையில் பொதுமக்களும்  திரண்டு நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழவில்லை.

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

இதனால் கார் கண்ணாடியை உடைத்து குடிபோதையில் இருந்த நபரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதையில் இருந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. மன  உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிக அளவில் மது அருந்தி வாகனத்தை ஓட்டி விபத்து உண்டாக்கி பின்னர் வாகனம் ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி உறங்கியது தெரியவந்தது.

ஓரினசேர்க்கைக்காக வடமாநில இளைஞர் கடத்த முயற்சி; கத்தி, கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?