கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கூறியும் கல்லூரி முதல்வரை கண்டித்தும் சட்ட கல்லூரி மாணவர்கள் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு சட்ட கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரியில் சேரும் பொழுது தனது இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழை கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்ததாகவும், அதைனை காணவில்லை என்று கல்லூரி சார்பாக கடந்த மாதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் கல்லூரி ஊழியர்களை தகாத வார்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்லூரி ஊழியர்கள் முதல்வரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் ஷேக் முகமது மற்றும் ஹாரிதா ஆகிய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தொடர்ந்து இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.
மேலும் காரணம் இல்லாமல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மற்றொரு மாணவனை இடைநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக நேற்று பகல் ஒரு மணி அளவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மாணவர்கள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களின் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், 'விசாரணை குழுவில்' மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
படகில் கமலாலயம் சென்ற முதல்வர்; நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி
இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை கடிதமாக எழுதி அதில் முதல்வர் கையொழுத்து கொடுக்கும் பட்சத்தில் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.