எடப்பாடி பழனிசாமியை பாகுபலியாக மாற்றிய அதிமுகவினர்

Published : Apr 01, 2023, 07:53 PM IST
எடப்பாடி பழனிசாமியை பாகுபலியாக மாற்றிய அதிமுகவினர்

சுருக்கம்

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். 

அதிமுகவில் பல்வேறு சட்ட குழப்பங்களைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வடிவங்களில் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது. அதில் அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது செல்லும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் "தமிழக மக்களின் பாகுபலியே!!  கழகப் பொதுச் செயலாளரே!!!  தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகங்களுடன் கட் அவுட்டை வைத்துள்ளனர். பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர். அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!