கோவைக்கு புதிய திட்டங்களை வாரி வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த மாமன்ற உறுப்பினர்கள்

By Velmurugan s  |  First Published Apr 1, 2023, 10:53 AM IST

கோவை மாவட்டத்திற்கு மெட்ரோ, செம்மொழி பூங்கா மற்றும் எழில்மிகு கோவை திட்டம் அறிவித்த தமிழக அரசுக்கு கோவை மாநகராட்சி மாமன்றம் பட்ஜெட் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 


கோவை மாநகராட்சி 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. மாநகராட்சி நிதிக்குழு தலைவர் முபசீரா வெளியிட மேயர் கல்பனா ஆனாந்தகுமார் பெற்றுக்கொண்டார். முன்னதாக பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் பேசிய மேயர் கல்பனா ஆனந்தகுமார் கூறும் போது, அண்மையில் வெளியான தமிழக நிதிநிலை அறிக்கையில் கோவை மாவட்டத்திற்கு செம்மொழி பூங்கா, மெட்ரோ ரயில் திட்டம், மற்றும் எழில்மிகு கோவை ஆகிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசுக்கு மாமன்றம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

மேலும் 2023-24 மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் வருவாய் மற்றும் மூலதன வரவினம் ரூ.3,018.90 கோடி எனவும், செலவினம் ரூ.3,029.07 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் கோவை மாநகராட்சியில் ரூ.10.17 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கனமழை மற்றும் சூறைக்காற்றால் ரூ.3 கோடி மதிப்பிலான வாழை சேதம்; விவசாயிகள் வேதனை

மேலும் இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு செலவிற்கு 24.30 சதவீதம், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைப்பணிக்காக 20.55 சதவீதம், கல்வித்துறைக்கு 11.25 சதவீதம், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 11.75 சதவீதம், மற்றும் பணியமைப்பு மற்றும் நிர்வாக செலவீனங்களுக்கு 32.15 சதவீதம் என ஒதுக்கீடு செய்து மதிப்பிடப்பட்டுள்ளது.  இதே போல கடந்த 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 63 திட்டப்பணிகளில் 24 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 38 பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!