கோவில் திருவிழாவில் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா... சிறுமிகள் முதல் வயதானோர் வரை ஆடி அசத்தல்!!

By Narendran S  |  First Published Mar 31, 2023, 10:59 PM IST

கோவையில் கோவில் திருவிழாவில் சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் வண்ண ஆடைகளுடன் கூடி நின்று ஒயிலாட்டம் ஆடியது அங்கிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. 


கோவையில் கோவில் திருவிழாவில் சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் வண்ண ஆடைகளுடன் கூடி நின்று ஒயிலாட்டம் ஆடியது அங்கிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக ஒயிலாட்டம் இருந்து வருகிறது. அழிந்து வரும் ஒயிலாட்ட கலையை மீட்டெடுக்கும் விதமாக இளம் தலைமுறையினர் தற்போது இக்கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுவை சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு பலாப்பழம் வழங்கிய பாஜக உறுப்பினர்

Latest Videos

undefined

அந்த வகையில் கோவையை சேர்ந்த சிம்மக்குரல் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பல ஆண்டுகளாக ஒயிலாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கோவை சரவணம்பட்டியை அடுத்த பெத்தநாயக்கன் பாளையம் ஸ்ரீ அம்மன் நகரில் பிரசித்தி பெற்ற ஜலக்கன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அனைவருக்கும் ஒயிலாட்ட கலையை பறைசாற்றும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

இதையும் படிங்க: பேருந்து ஓட்டுநரான கோவை பெண்… மக்களிடையே குவிந்து வரும் பாராட்டு!!

இதில், கோவை சுற்றுவட்டார பகுதிகளான கணபதி, சரவணம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பம்பை இசை முழங்க, வண்ண ஆடைகளுடன் கூடி நின்று ஒயிலாட்டம் ஆடினர். இது அங்கு கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

click me!