சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தால் 2 லாரிகள் மோதி விபத்து; சிறுவன் பலி

By Velmurugan s  |  First Published Apr 1, 2023, 12:13 PM IST

கோவை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுவன் உயிரிழப்பு.


கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் கம்பத்தில் மோதி கோவை நோக்கி வந்த மற்றொரு லாரி மீது மோதி கீழே சாய்ந்தது.

இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில். ஹாலோ பிளாக் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கற்கள் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

கோவைக்கு புதிய திட்டங்களை வாரி வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த மாமன்ற உறுப்பினர்கள்

மேலும் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பொது மக்கள் உதவியுடன் சரி செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த  அதே பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவன் பிரவீன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கனமழை மற்றும் சூறைக்காற்றால் ரூ.3 கோடி மதிப்பிலான வாழை சேதம்; விவசாயிகள் வேதனை

click me!