
கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் மித்ரா மஹால் மணமகன் ஹரிஷ் மணமகள் சௌபர்ணிகா திருமணம் நடைபெற்றது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து மிகவும் பிரம்மாண்டமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிலும் குறிப்பாக கல்யாண விருந்தில் விருந்தோம்பலுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடு தற்பொழுது அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "MR GRANDSON CATEEN" என்ற நிறுவனம் இந்த விருந்தோம்பலை நடத்தியுள்ளது. சுமார் மூன்று தலைமுறைகளாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திருமணத்தில் அந்த விருந்தோம்பல் ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாய் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்
மன்னர் கால இருக்கைகள் போல் இருக்கைகள் தயார் செய்யப்பட்டு உணவு பரிமாறப்படும் தட்டுகளை மயில் இறக்கையை விரித்து தாங்கி இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு அதில் தங்கம் போல் ஜொலிக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. பல வகையான இனிப்புகள் பண்டங்கள், பல வகையான உணவுப் பொருட்கள் என அசத்தலாக நடைபெற்ற இந்த கல்யாண விருந்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க..அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியல் ரெடி.. எப்போ ரிலீஸ் தெரியுமா.? திமுக கொடுத்த ஷாக்