உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தடாகம் பள்ளத்தாக்கில் ஆய்வு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கில் யானை வழித்தடத்தில் செங்கல் சூளைகளுக்காகத் தோண்டிய அனைத்து குழிகளையும் 3 மாத காலத்திற்குள் மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கில் செங்கல் சூளைகளுக்கு எதிரான மனுதாரர்களில் ஒருவரான எஸ். கணேஷ், "பள்ளத்தாக்கில் உள்ள சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, வீரபாண்டி ஆகிய வருவாய் கிராமங்களில் மொத்தம் 876 மனைகள் சட்டவிரோத சிவப்பு மணல் அகழ்வினால் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளத்தாக்கில் 569 வயல்கள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மார்ச் 2ஆத் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பாரதா சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குழிகளையும் மூன்று மாத அவகாசத்துக்குள் மூடுமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலெக்டரின் அவரது தனி உதவியாளர் (வேளாண்மை), மாவட்ட வன அலுவலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (டிஎன்பிசிபி) கோவை வடக்கு மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர், பொதுப்பணித்துறையின் செயல் பொறியாளர் மற்றும் கோவை வடக்கு மாவட்ட் வருவாய் கோட்ட அலுவலர் (ஆடிஓ) ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "குவாரிகளால் ஏற்பட்ட சேதம் அடைந்த நிலத்தை மூன்று மாதங்களுக்குள் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றவேண்டும். அதற்கு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நடத்தவேண்டும்" என்று நீதிபதிகள் கூறி இருந்தனர். மாவட்டம் நிர்வாகத்தால் குழு அமைக்கப்பட்டதற்கு நீதிபதிகள் வரவேற்ம்பு தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கையை ஆய்வுக் குழு தயாரிக்கும். விரைவில் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கலெக்டர் கிராந்தி குமார் பதி கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு ஜனவரியில் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பள்ளத்தாக்கில் சட்டவிரோத செயல்பட்டுவந்த 177 செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது.
பெருங்கடல்களில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்; 2040க்குள் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!