தமிழகத்தை உலுக்கிய கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. கைதான 5 பேரை ரவுண்ட் கட்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்..!

By vinoth kumar  |  First Published Mar 10, 2023, 2:51 PM IST

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அக்டோபர் 23ம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய  5 பேரிடம் காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அக்டோபர் 23ம் தேதி  கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரது வீட்டில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படும்  ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகரப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பிறகு 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை நீததிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் நடத்தினர். இதனையடுத்து, இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் மேலும் 5 பேர் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-  ஆசைவார்த்தை கூறி என் பொண்ண நாசா செஞ்சுட்டா.. காவல் நிலையத்தில் கதறிய தாய்..!

இந்நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் சில இடங்களுக்கும் அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றது. ஏற்கனவே இவர்களிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!