கோவையில் கழுத்தை நெறித்த கடன் தொல்லை; காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

By Velmurugan s  |  First Published Mar 10, 2023, 3:51 PM IST

கோவை தொண்டாமுத்தூர் அருகே தூக்கில் தொங்கியவாறு இருந்த கணவன், மனைவியின் உடல்களை மீட்ட காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடத்த குளத்துப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 35). இவர் ஜெராக்ஸ் கடை மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் விற்பனை  தரகராவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வெண்ணிலா (30). 7 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக வீடு கட்டி குடியேறியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடு திறக்காமலேயே இருந்த நிலையில், வீட்டில் இருந்து நுர்நாற்றம் வீசியுள்ளது. இதைடுத்து அக்கம் பக்கத்தினர் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

Tap to resize

Latest Videos

நாகையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்

அப்போது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக தொங்கியது தெரியவந்தது. இதைடுத்து உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அய்யாச்சாமிக்கு 2.5 கோடி கடன் இருந்ததாகவும், அண்மையில் கட்டிய வீடும் கடன் வாங்கி கட்டியதால் சிரம்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குமரியில் பரபரப்பு; இளம் பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

click me!