
கோவை மாவட்டம் நஞ்சுண்டா புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதந்திர கண்ணன். இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுதந்திர கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நான் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல், கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த நான்.
இரவில் கள்ளக்காதலனுடன் வீடியோ கால்; மனைவியின் கையை துண்டித்த கணவன் - வேலூரில் பரபரப்பு
2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மீண்டும் எனது சொந்த ஊருக்கு வந்துள்ளேன். ஆனால் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே முகவரியில் வசிக்கும் எனது மகளின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக கடந்த 15ம் தேதி இணையதளம் வாயிலாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் என்னால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்னை போன்று எனது தொகுதியில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது போன்று விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து அவர்கள் மீண்டும் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரையில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால் கோவை தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.