கோவை மாவட்டத்தில் நூதன முறையில் ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த 6 நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் பிரகாஷ் (வயது 44) என்பவர் நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் மூலமாக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த சின்னகுட்டி என்பவர் பிரகாஷை தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்தவர்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும் அதை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15% கமிஷன் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கடந்த 10ம் தேதி பகல் 1 மணிக்கு சின்னக்குட்டி மற்றும் எதிரிகள் பிரகாஷை பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதிக்கு பணத்துடன் வரவழைத்து, பிரகாஷின் கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
கடனுக்கான தவணை தொகையை செலுத்தாத பெண்ணை வீடு புகுந்து தாக்கிய தனியார் வங்கி ஊழியர்கள்
பிரகாஷ் சத்தம் போடவே, அவரை மிரட்டிவிட்டு பணத்துடன் தப்பிச் சென்றுவிட்டார்கள். இது தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கீர்த்திவாசன் புலன் விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி; விரக்தியில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தந்தை தற்கொலை
வழக்கில் சம்பந்தப்பட்ட சின்னகுட்டி(42), மீனாட்சி(38), பாண்டியன் (52), அழகர்சாமி (45), சௌமியான்(29), கவாஸ்கர்(26) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 1,27,50000, பணம் எண்ணும் இயந்திரம்-1 மற்றும் நான்கு சக்கர வாகனம்-3 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை 12 நேரத்திற்குள் கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி பண வெகுமதி வழங்கினார்.