கோவையில் திமுக கவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர் தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில், திமுக 20 வது வார்டு வட்ட துணைச் செயலாளர் அன்னபூரணியை திமுக மாமன்ற உறுப்பினர் மரியராஜ் பொது வெளியில் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
பொது வெளியில் தாக்குதலுக்கு உள்ளான திமுக 20 வது வார்டு வட்ட திமுக துணை செயலாளர் அன்னபூரணி, தனது ஆடை கிழிந்து அவமானம் ஏற்பட்டதால் தி.மு.க மாமன்ற உறுப்பினர் மரியராஜ் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்ய திமுக கவுன்சிலர் மரியராஜிடம் பலமுறை வலியுறுத்தியும் வேலை நடக்காததால், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் இப்பகுதியில் புதர்மண்டி கிடந்த இடங்களை அன்னபூரனியே தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த மரியராஜ் பெண் என்றும் பாராமல் அன்னபூரணியை பொதுவெளியில் தாக்கியதுடன். அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும், இதில் மரியராஜ் தாக்கியதில் தனது ஆடை கிழிந்ததாகவும், மரியராஜின் குடும்ப உறுப்பினர்களும் ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க..சென்னை வந்த அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக.. மின் இணைப்பு துண்டிப்பால் கடுப்பான பாஜகவினர்
மேலும், தற்பொழுது வயதான தந்தை, கனவருடன் தனியாக வசிப்பதால் இவர்களால் அச்சம் ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார். திமுக ஆட்சியில் திமுகவினர் பொது மக்களை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கோவையில் சமீபகாலமாக திமுகவினரே ஒருவரை, ஒருவர் பொது வெளியில் தாக்கிகொள்ளும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மேலும், பொதுவெளியில் பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி உடையை கிழித்த திமுக கவுன்சிலரின் இந்த செயல் பொது மக்களிடையே முகம் சுளிக்க வைத்து உள்ளது. திமுக கவுன்சிலர் மற்றும் வார்டு செயலாளர் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்