பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மதுபோதையில் வந்த காதலனை பெண்ணின் உறவினர் வெட்டி கொலை செய்த நிலையில், தொடர்ந்து விரக்தியில் இருந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). இவரும் செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும் பாறையை சேர்ந்த பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு வீட்டாரும், திருமணத்திற்கு சம்பத்தித்ததைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி பிரசாந்த் தன்யாவின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை மதுபோதையில் இருந்ததால் கண்டித்தனர். அப்போது அங்கிருந்த காதலித்த பெண்ணின் தாய் மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக செட்டிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தனர்.
அம்மா, அப்பா சண்டையால் விரக்தி; வாழ்க்கையை முடித்துக்கொண்ட பள்ளி சிறுமி
இதற்கிடையே காதலன் தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் அப்பெண் மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்துள்ளார். கடந்த 6ம் தேதி இரவு வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென விஷத்தை குடித்து மயங்கி உள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து கொண்டே இருந்த நிலையில் - உதவியாக அவரது பாட்டியை அருகிலேயே இருக்க வைத்தனர். இந்நிலையில் நேற்று இளம் பெண்ணின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்று போது அப்பெண் தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வர தெரிவித்து அவரை வெளியில் அனுப்பி வைத்துள்ளார்.
வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்
பாட்டி மருந்து கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாட்டி மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த போது அவரது அறையில் தூக்கில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மதுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.