பெரியநாயக்கன்பாளையம் அருகே ராட்சத குழியில் விழுந்து 9ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு விளையாட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் 14 வயதான ஹரிஷ். இவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்புக்கு செல்லவுள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஹரிஷ் அவருடைய நண்பர்கள் மதன், செல்வா, பிரியதர்ஷன் மற்றும் சுஜித்குமார் ஆகியோர் நாயக்கன்பாளையம் அருகே சிவகுமாருக்கு சொந்தமான கல்லுக்குழி குட்டை வடக்கு காடு என்ற இடத்தில் உள்ள ராட்சத குழியில் மழைக்காலங்களில் பெய்த நீர் தேங்கி இருந்ததால் அங்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது தண்ணீரின் அடுத்த பகுதியில் மிதந்து வந்த கட்டையை எடுக்க ஆழம் தெரியாமல் சென்ற ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி எதிர்பாராதவிதமான சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார், தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று இறந்த ஹரிஷ் உடலை மீட்டனர். மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் காட்டுயானைகள் வரும் இடம் என்பதால் அங்கு யானையின் சாணி கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
“ என்ன ரோடு இது? என் வண்டி வந்தாலே தாங்காது” அதிகாரிகளை கண்டித்த மதுரை ஆட்சியர்..