கோவையில் தீ பிடித்து எரிந்த பேருந்து: கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்

By Velmurugan s  |  First Published Jan 30, 2023, 9:37 AM IST

கோவை மாவட்டம் மேட்டூர் அடுத்த சாம்பள்ளியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே குதித்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.


கோயம்புத்தூரில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 43 பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து இரவு 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த சாம்பள்ளி அருகே வந்தபோது பேருந்தின் முன் பகுதியில் கரும்புகை வெளியாகியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர்  உடனடியாக பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தார். 

கை,கால்களை வெட்டுவேன், கொலை செய்வேன் என ரவுடிகள் போல் செயல்படும் திமுக அமைச்சர்கள்- ஸ்டாலினை விளாசும் பாஜக

Latest Videos

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேகமாக கீழே இறங்கத் தொடங்கினர். அப்போது பேருந்து முழுவதும் மளமளவென  கொழுந்து விட்டு தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கருமலை கூடல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது.! ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது- செல்லூர் ராஜூ

இருப்பினும் விபத்தில் பேருந்து முழுவதும் சேதமடைந்தது. மேலும் இந்த தீ விபத்தில் ஐந்து ஆண்கள், மூன்று  பெண்கள் என மொத்தம் எட்டு பயணிகள் லேசான காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த  விபத்து குறித்து கருமலை கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!