கோவையில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

Published : Apr 03, 2023, 04:21 PM IST
கோவையில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

சுருக்கம்

கோவை மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. போதை இல்லா தமிழகம் என்ற வாகனத்தை குறிக்கோளாகக் கொண்டு காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் பாளையம்  Housing Unit பூங்கா  பகுதிக்கு  விரைந்து சென்றனர். 

பைனான்ஸ் ஊழியரின் அரைகுறை பயிற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விபத்து

அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்த கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த  மெய்யரசன், அதே பகுதியை சேர்ந்த புவனேஷ், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பரத், மற்றும் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த லலித்குமார் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.050 கிலோ  கிராம் எடையுள்ள கஞ்சா, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள்

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த காவல் துறையினர். அப்படி தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!