ஏப்ரல் 4ம் தேதி விடுமுறை.. மதுக்கடை, இறைச்சிக்கடை இயங்காது.! முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 3, 2023, 2:40 PM IST

ஏப்ரல் 4 ஆம் தேதி மதுக்கடை, இறைச்சிக்கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதியாக மகாவீரா் அழைக்கப்படுகிறாா். இவா் பீகாாில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளா்ந்தாா். 

தனது 30 ஆவது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறினாா். மகாவீரா் கிமு 500 ஆம் ஆண்டில் சித்திரை மாதத்தில் வரும் சுக்லா பக்ஷாவின் 13 ஆம் நாளில் பிறந்தாா் என்று நம்பப்படுகிறது. மகாவீரா் ஜெயந்தி ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நாளை செவ்வாய்கிழமை வருகிறது.  நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்,பட்டுள்ளது.

இதையும் படிங்க..ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாளை (ஏப்ரல் 4) கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவை மனை, சிங்காநல்லூர் ஆடு அறுவை மனை, போத்தனூர் மற்றும் கணபதி மாடும் அறுவை மனை ஆகியவை செயல்படாது. இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.

மீறி செயல்பட்டால் அவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களில் இயங்கும் இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், பார்கள், மதுக்கூடங்கள் இயங்கும் விடுதிகள், கிளப்கள், ஓட்டல்கள் ஆகியவற்றை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..100 சதவீதம் உண்மையாக இருந்தேன்.. ஆனால் எனக்கு.? விவாகரத்து குறித்து உண்மையை உடைத்த சமந்தா

click me!