“காவிய நாயகி காலமானார்...” - முதல்வர் ஜெ. ஆட்சியில் முத்திரை பதித்த முத்தான திட்டங்கள்

First Published Dec 9, 2016, 10:40 AM IST
Highlights


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முத்திரை பதித்த முத்தான திட்டங்களை கொண்டு வந்தார்.

சென்னை நகரத்திற்கு, பல்வேறு முக்கிய திட்டங்கள் முதுலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் கிடைத்தாலும், இன்றும் மக்களின் தாகம் தீர்க்கும் புதிய வீராணம் திட்டம், சரித்திரசாதனையாகவே பேசப்படுகிறது.

ஜெயலலிதா, சென்னைக்கு கொண்டு வந்த திட்டங்கள் ஒரு பார்வை:-
புதிய வீராணம் திட்டம்

சென்னையில் இருந்து, 235 கி.மீ., துாரத்தில், கடலுார் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்ளது. 1968ம் ஆண்டு, இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வர, திமுக ஆட்சியில் திட்டனா.பல்வேறு பிரச்சனைகளால் அந்த திட்டம் தோல்வியடைந்தது.

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும், அதே சில மாற்றங்களை செய்து புதிய வீராணம் குடிநீர் திட்டம் என செயல்படுத்தினார். 2004ம் ஆண்டு, புதிய வீராணம் திட்டம் முழுமையாகமுடிந்து, செயல்பாட்டிற்கு வந்தது.

குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்த சென்னை நகருக்கு, ஜெயலலிதா, வீராணம் திட்டம் மூலம் மக்களின் தாகத்தை தீர்த்து வைத்தார்.

இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
தண்ணீர் கிடைக்காமல் ஏழை மக்கள் தவிக்கும்போது, பணம் உள்ள பலர், கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதனால், ஏழை மக்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருந்தும்நிலையை உருவாக்கிட, கடந்த பிப்ரவரி மாதம்,, சென்னை மாநகராட்சி மூலம் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், தற்போது, 20 குடிநீர் ஆலைகள் மூலம் இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு, 1 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம்செய்யப்படுகிறது.

சென்னை மாநகரில் ஓடும் கூவம், அடையாறு ஆறுகளை, மாநகராட்சி மூலம் துார்வாரி சுத்தப்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டார். கடந்த, 2012 - 13ம் ஆண்டில் நடந்த இந்த பணியால், கொசுதொல்லை பெருமளவில் குறைந்தது. 2 ஆறுகளிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டு, ஆகாய தாமரைகள் அகற்றப் பட்டு பொலிவுடன் காணப்பட்டன

சென்னையில், கொசு தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற, முதல்முறையாக ஏழை மக்களுக்கு, நகர் முழுவதும், 10 லட்சம் கொசு வலைகளை இலவசமாக வழங்கினார்.

கடந்த, 2004ல், தமிழகத்தில் சுனாமி பேரழிவு ஏற்பட்ட பின், கடலோர மீனவ மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு, சுனாமி குடியிருப்புகளை கட்டி கொடுத்தார். இந்த திட்டத்தின் கீழ்,ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு, மீனவர்கள் அங்கு இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான திட்டம் மற்றும் செயல்பாடுகளால், சென்னை எண்ணுார், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் சுனாமி குடியிருப்புகள்கட்டப்பட்டுள்ளன.


மாறிப்போன கூவம் நதி

கடந்த 2011 - 2016ம் ஆண்டு 4வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்போற்றபோது, ரூ.6,000 கோடியில் கூவம் நதி மறு சீரமைப்பு திட்டத்தை கொண்டு வர உத்தரவிட்டார்.

கூவம், அடையாறு போன்ற நீர்வழித்தடங்களிலும், என்எஸ்சி போஸ் சாலை, பாரிமுனை முத்துசாமி சாலை போன்ற சாலையோரங்களில் வசித்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுத்தார்.

சென்னையில் வெள்ள தடுப்பு மற்றும் நீர்வழி போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. அதனை தனது முயற்சியால், அடையாறு முதல்கோவளம் வரை, தெற்கு பக்கிங்காம் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்பட்டது

ஏழைகளுக்கு மலிவு உணவகம்

ஏழை மக்களுக்காக, மலிவு கட்டணத்தில் சாப்பிட நகரில் முதல்கட்டமாக, 200 'அம்மா' உணவகங்களை, மாநகராட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது, சென்னையில் மட்டும், 7 அரசுமருத்துவமனைகள் உட்பட, 407 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன.

click me!