இரும்பு மனுஷி ஜெயலலிதா

First Published Dec 8, 2016, 6:07 PM IST
Highlights


பெண்களுக்கு இங்கு யாரும் அதிகாரம் தருவதில்லை அதை பெண்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் ரொசியானியின் பொன் மொழிகளால்  கவரப்பட்டவர்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதா… தாம் அவமானப்பட்ட போதெல்லாம் அதையே ஏணியாக்கி உயர்ந்தவர் ஜெயல்லிதா….

துரோகம், அவமானம்,தோல்வி என தொடர்ந்து அடிபட்டதால்தான் ஆளுமையின் மொத்த உருவமாக திகழ்ந்தார். ஆளுமையின் உச்சத்தை தொட்ட ஜெயல்லிதா காலகாலமாக பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்களை, சவால்களை எப்படி எதிர்கொள்வது என்ற வித்தையை தெரிந்து வைத்திருந்தார்.

சிறு வயதில் தந்தையின் பாசம் என்னவென்று தெரியாமல் வளர்ந்ததும், பொருளாதார நெருக்கடியினால்  தனக்கு சம்பந்தமில்லாத திரைத்துறைக்கு வர நேர்ந்த்தும், அங்கு தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களும் இதுவரை யாரும் அனுபவித்திராதது என்றே சொல்ல வேண்டும்.

அவரைச் சுற்றி அன்பான சொந்தங்கள் இல்லை என்றாலும் பொது வாழ்வில் அவருக்கு கிடைத்த வெற்றிக்கு காரணம் ஜெ,வின் உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் கோடான கோடி தொண்டர்கள்தான்…

திரையுலக சவால்களை சந்தித்து வந்த ஜெயலலிதா 1982 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.வி.ல் இணைந்தார். கட்சிக்காக அவர் கொடுத்த உழைப்பு எம்.ஜி.ஆரை ஆச்சரியப்படுத்தியது. அந்த உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி…

அந்தப் பதவியிலும் தனி முத்திரையை பதித்தவர்தான்  ஜெயலலிதா…இரவு பகல் பாராமல் கட்சிக்காக உழைத்த ஜெயலலிதா அப்போதே கட்சியின் அசைக்க முடியாத ஓர் இடத்தை பிடித்தார். பின்னர்  1984 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு மாநிலங்களவை  உறுப்பினர் பதவியை வழங்கினார் எம்ஜி,ஆர்.

மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் ஆணித்தாமான பேச்சு அனைவரையும் கவர்ந்த்து. கொஞ்சம், கொஞ்சமாக தனது ஆளுமைத்திறனால் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஜெயலலிதா ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராக இரண்டாம் இடத்தைப் பிடித்தார்,

ஆனால் மிண்டும் அவரது வாழ்வில் பெரும் சரிவு ஏற்பட்டது. ஆம் எம்.ஜி.ஆரின் மறைவு அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தருணத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது. ஆர்,எம் வீரப்பன் போன்ற தலைவர்கள் ஜெயலலிதாவை அரசியலை விட்டே துரத்த துடித்தனர்.

அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்த்து, ஜா...ஜெ அணிகள் உருவாகின..1989 ல்  நடைபெற்ற தேர்தலில் 26 தொகுதிகளை மட்டுமே பெற்ற ஜெயலலிதா ஒரு கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.வை  தனதாக்கிக் கொண்டார்.

வசீகரமான ஜெயலலிதாவின் முகம் அனைத்துத் தொண்டர்களையும் அவர் பால் ஈர்த்த்து. அன்று முதலே ஜெயலலிதாவுக்கு ஏறுமுகம்தான்…1989 முதல் 1991 வரை இரண்டு ஆண்டுகள் சட்டப் பேரவையிலும் ஜொலித்தார் ஜெயலலிதா… அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப் பட்டபோது ஒற்றைச் சிங்கமாய் சட்டசபைக்குள் நுழைந்து  தி.மு.க.வின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். உற்சாகமடைந்த தொண்டர்கள்  அடுத்து வந்த 1991 தேர்தலில்  ஜெவுக்கு முழு வெற்றியை அளித்தனர்…அன்று தொடங்கிய அவரது வெற்றி இறுதி வரை தொடர்ந்தது…

எந்த சந்தர்ப்பத்திலும் எதற்கும் விட்டுக் கொடுக்காமல்  தான் நினைத்த்தை சாதித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்…அதனால் தான் அனைத்துத் தரப்பினராலும் அவர் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படுகிறார்….

click me!