ஆசிய பாரா விளையாட்டு செஸ் போட்டியில் பதக்கங்களை அள்ளிய திருச்சி வீராங்கனை! உற்சாக வரவேற்பு வீடியோ!

Oct 17, 2018, 8:01 PM IST

“ஆசிய பாரா விளையாட்டு – 2018” என்ற மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளானது இந்தோனேஷியா நாட்டில் ஜெகார்த்தா நகரில் நடந்தது. ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் 44 நாடுகள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் மிகப்பெரிய பாரா விளையாட்டுப் போட்டியான இதில் இந்தியாவில் இருந்து 198 வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். 

13ம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் முடிவுக்கு வந்தன. இந்தியாவை சேர்ந்த வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி 35 வெண்கலம் பெற்று 9வது இடத்தைப்பிடித்தனர். இந்த போட்டியில் 18 வகை விளையாட்டுகள் நடப்பாண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ செஸ் வினளயாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் ஜெனித்தா ஆண்டோ வேகமாக காய்களை நகர்த்தும் பிரிவில் தங்க பதக்கமும், தரநிலை ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், வேகமாக காய்களை நகர்த்தும் இரட்டையர் பிரிவில் சில்வர் பதக்கமும், தரநிலை இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் என 4 பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும்  பெருமை சேர்த்துள்ளார். அவர் இன்று விமானம் மூலம் திருச்சி விமானநிலையத்திற்கு வந்த  ஜெனித்தா ஆண்டோவிற்கு சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை ஜெனித்தா ஆண்டோ சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.