பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தற்போது நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி இறுதிப் போட்டியான வெண்கலப் பதக்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் 33ஆவது ஒலிம்பிக் தொடரில் இந்தியா வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஜூடோ, ரோவிங், படகு போட்டி, பேட்மிண்டன், குதிரையேற்றம், நீச்சல், தடகளப் போட்டி, குத்துச்சண்டை, கோல்ஃப், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ஜூலை 27ஆம் தேதி முதல் நாளில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவு, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆகிய போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.
மகளிருக்கான ஒற்றையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஹாக்கியில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து 2ஆவது நாளான ஜூலை 28ஆம் தேதி நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் பதக்கமான வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த பெண்மணி என்ற சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார்.
காருன்னா யாருக்கு தான் பிடிக்காது – தோனியைப் போன்று கேரேஜில் கார்களை குவிக்கும் சூர்யகுமார் யாதவ்!
இதே போன்று மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் 10மீ ஏர் ரைபிள் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
Rohit Sharma Wins T20 World Cup – இந்திய அணி டிராபி வென்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவு!
இந்த நிலையில் தான் 3ஆவது நாளான ஜூலை 29 ஆம் தேதி இன்று, இந்தியா பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, வில்வித்தை ஆகிய போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் தற்போது நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிண்டால் 145.3 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.
முதலில் தகுதிச் சுற்று போட்டியில் 631.5 புள்ளிகள் பெற்று 5ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் 145.3 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தான் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தகுதிச் சுற்று போட்டியில் விளையாடியது. இதில், இந்த ஜோடி 580 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நாளை 30 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் போட்டியில் இந்த ஜோடி தென் கொரியாவைச் சேர்ந்த ஓ யே ஜின் மற்றும் லீ வோன்ஹோ ஜோடியை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.