இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தனது கார் கேரேஜில் ஏராளமான கார்களை வாங்கி குவித்து வருகிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று கைப்பற்றியது.
Rohit Sharma Wins T20 World Cup – இந்திய அணி டிராபி வென்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவு!
இதைத் தொடர்ந்து, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிற்து. டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி நாளை பல்லேகலேயில் தொடங்குகிறது. இந்த நிலையில் தான் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் கார்கள் மீது அளவு கடந்த ஆசை கொண்டவர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. கார்கள் நிறுத்தி வைப்பதற்கு என்று தனியாக கேரேஜ் கட்டியவர் எம்.எஸ்.தோனி. அந்தளவிற்கு கார், பைக்குகள் வைத்திருக்கிறார். அவரை மிஞ்சும் அளவிற்கு சூர்யகுமார் யாதவ் கார்கள் வைத்திருக்கிறாராம்.
கிட்டத்தட்ட 8 லட்சம் மதிப்பு கொண்ட நிசான் ஜோங்கா என்ற காரை தனிப்பட்ட முறையில் வடிவமைத்து வெளியில் சென்று வருவதற்கு பயன்படுத்தி வருகிறார். மேலும், 33 லட்சத்திற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், 64 லட்சத்திற்கு ஆடி க்யூ6 ஆகிய கார்களை வைத்திருக்கிறார். அண்மையில் 2 புதிய கார்களை வாங்கி கேரேஜில் வைத்துள்ளார். அதில் 75 லட்சத்திற்கு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 530 டி மற்றும் ஒரு கோடியில் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் என்ற சொகுசு கார்களை வாங்கியிருக்கிறார். பொதுவாக இந்திய கிரிக்கெட் பிரபலங்களும் கார், பைக் மீது அதிக காதல் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களில் தோனி, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரோகித் சர்மா என்று சொல்லிக் கொண்டே செல்லலாம்.