ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சென்னையில் நடந்து வந்த 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த 3ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. எனினும், இன்று 5 ஆவது மற்றும் 6ஆவது இடத்திற்காக இரு அணிகளும் மோதின. இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் 6 கோல் அடிக்க சீனா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது.
ஆசிய கோப்பைக்கு தீவிரமாக ஜிம் பயிற்சி செய்யும் ரோகித் சர்மா!
இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 2ல் தோல் மற்றும் 2 போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள மலேசியாவும், 3ஆவது இடத்தில் உள்ள தென் கொரியா அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.
Yashasvi Jaiswal: இந்திய அணியின் எதிர்காலம் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – நாசர் ஹூசைன் பாராட்டு!
இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா அடுத்தடுத்த கோல் அடித்தது. ஹார்திக் சிங் மற்றும் சுமித் இருவரும் முதல் கோல் அடிக்க உதவினர். போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து கிடைத்த பெனாலட்சி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹமர்னப்ரீத் சிங் 2ஆவது கோல் போட்டார்.
முதல் அரை மணி நேரத்தில் மன்ப்ரீத் சிங் 3ஆவது கோல் போட்டார். 4ஆவது கோலும் 39 நிமிடத்திற்குள் போடப்பட்டது. இறுதியாக 51ஆவது நிமிடத்தில் இந்தியா தனது 5ஆவது கோல் அடிக்க 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி எளிதில் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.
ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் பெறும் விராட் கோலி; நம்பர் ஒன் இடத்தில் ரொனால்டோ ரூ.26.7 கோடி!
நாளை இரவு 8.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் மலேசியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
Captivating snapshots from the India vs. Japan match at halftime - a rollercoaster of emotions and breathtaking moves on display! pic.twitter.com/6PGCFxZxbM
— Hockey India (@TheHockeyIndia)